75–வது நாள்: ஆயிரத்தில் ஒருவன் ரூ.1 கோடி வசூல்
Wednesday 28 May 2014
எம்.ஜி.ஆர்.நடித்த ஆயிரத்தில் ஒருவன் படம் டிஜிட்டலில் புதுப்பிக்கப்பட்டு மீண்டும் தமிழகம் முழுவதும் ரிலீஸ் செய்யப்பட்டது.
இப்படம் சென்னை சத்யம், ஆல்பர்ட் தியேட்டர்களில் 75 நாட்களை தாண்டி ஓடுகிறது. பிற மாவட்டங்களிலும் 100–வது நாளை நோக்கி ஓடிக்கொண்டு இருக்கிறது. இப்படம் இதுவரை ரூ.1 கோடிக்கு மேல் வசூல் ஈட்டியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆயிரத்தில் ஒருவன் 75 நாள் விழா சத்யம் தியேட்டரில் ரசிகர்கள் கொண்டாடினர். டைரக்டர் பி.ஆர்.பந்தலு மகன் பி.ஆர்.ரவிசங்கர், எம்.ஜி.ஆரின் மெய் காப்பாளர் கே.பி.ராம கிருஷ்ணன், திவ்யா பிலிம்ஸ் சொக்கலிங்கம் ஆகியோர் கவுரவிக்கப்பட்டனர். எம்.ஜி.ஆர்.நற்பணி மன்றம் சார்பில் ராஜூ இனிப்புகள் வழங்கினார்.
சத்யம் தியேட்டரில் தொடர்ந்து ஹவுஸ் புல் காட்சிகளாக படம் ஓடிக் கொண்டு இருப்பதாக சொக்கலிங்கம் தெரிவித்தார்.