7ஆம் அறிவு – அகடு. ஸ்ருதிஹாசனின் ரூ.40 லட்ச ஒற்றுமை
Monday, September 29, 2014
தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி ஆகிய மூன்று மொழிகளிலும் பிசியாக நடித்துக்கொண்டிருக்கும் நடிகை ஸ்ருதிஹாசன் சமீபத்தில் மகேஷ்பாபு நடித்து வெளியான ‘அகடு’ திரைப்படத்தில் ஒரு ஐட்டம் பாடலுக்கு நடனம் ஆடியுள்ளார் என்பது அனைவரும் அறிந்ததே. ஆனால் அவர் அந்த ஒரு பாடலுக்கு ஆடியதற்காக ரூ.40 லட்சம் சம்பளம் வாங்கியதாக தற்போது செய்துகள் கசிந்து வருகின்றன.
ஸ்ருதிஹாசன் ஏற்கனவே ராம்சரண் நடித்த ‘எவடு’ திரைப்படத்தில் ஐட்டம் பாடலுக்கு நடனம் ஆடியிருந்தாலும், அகடு படத்திற்கு அவர் வாங்கியுள்ள சம்பளம் வேறு எந்த படத்திற்கும் வாங்கியதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கிய ‘ஏழாம் அறிவு’ திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்த ஸ்ருதிஹாசன் அந்த படத்தில் நடிப்பதற்காக ரூ.40 லட்சம்தான் சம்பளம் வாங்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் அந்த படத்திற்காக அவர் கிட்டத்தட்ட ஒரு வருடகாலம் கால்ஷீட் கொடுத்திருந்தார். ஆனால் அகடு படத்தில் நடனம் ஆட பத்து நாட்கள் மட்டுமே கால்ஷீட் கொடுத்துவிட்டு அதே நாற்பது லட்சத்தை சம்பளமாக பெற்றுக்கொண்டார்.