34 வருடங்களுக்கு பிறகு சின்னத்திரைக்கு திரும்பினார் ஏ.ஆர்.ரகுமான்
Thursday 18 Sep 2014
1980ம் ஆண்டில் ஒண்டர் பலூன் என்ற சின்னத்திரை தொடரில் நடித்தார் ஏ.ஆர்.ரகுமான். அதன் பிறகு அவர் சின்னத்திரை பக்கம் வரவில்லை. தற்போது, அதாவது 34 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் சின்னத்திரைக்கு திரும்பி உள்ளார். அஷூதோஸ் கவுரிகர் இயக்கும் எவரெஸ்ட் என்ற சின்னத்திரை நிகழ்ச்சிக்கு ஏ.ஆர்.ரகுமான் இசை அமைக்கிறார். அஷூதோஸ் இயக்கிய பல படங்களுக்கு ஏ.ஆர்.ரகுமான் இசை அமைத்துள்ளார்.
அதன் அடிப்படையில் இதற்கு இசை அமைக்க ஒப்புக் கொண்டுள்ளார்இதுகுறித்து ஏ.ஆர்.ரகுமான் கூறியிருப்பதாவது: ஒண்டர் பலூனுக்கு பிறகு இப்போது மீண்டும் சின்னத்திரைக்கு வந்திருக்கிறேன். சின்னத்தரை பெரிய அளவில் வளர்ச்சி அடைந்துள்ளது. ஹை டெபினிசியனில் ஒளிபரப்புகிறது. அஷூதோஸ் தன் படங்களுக்கு என்னிடம் நல்ல பாடல்களை வாங்கியிருக்கிறார். அவருடன் பணிபுரிவதே நல்ல அனுபவம். எவரெஸ்ட் நிகழ்ச்சியின் கான்செப்ட் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. அதன் தீம் மியூசிக்கை முடித்து விட்டேன் என்கிறார் ரகுமான்.