ஸ்ருதிக்கும் எனக்கும் இடையே சிண்டு முடிவதை நிறுத்துங்க: தமன்னா பாய்ச்சல்
Wednesday, December 11, 2013
சென்னை: ஸ்ருதிக்கும் எனக்கும் இடையே ஒரு தகராறும் இல்லை. தயவு செய்து எங்களுக்குள் சிண்டு முடிவதை நிறுத்துங்கள் என்று தமன்னா தெரிவித்துள்ளார். தமன்னா அஜீத் ஜோடியாக வீரம் படத்தில் நடித்துள்ளார். படத்தில் அம்மணி குடும்பத்து குத்துவிளக்காக வருகிறாராம். இந்த பொங்கலை அஜீத் ரசிகர்கள் தவிர்த்து தமன்னாவும் பெரிதும் எதிர்பார்க்கிறார். வீரம் படம் கோலிவுட்டில் தனது மார்க்கெட்டை தூக்கிவிடும் என்று நம்புகிறார் தமன்னா.
சென்டிமென்ட்
வீரம் படத்தில் தனக்கு அளிக்கப்பட்ட காட்சிகளில் நிறைய சென்டிமென்ட் உள்ளதாக தமன்னா தெரிவித்துள்ளார். படத்தில் அஜீத் 4 தம்பிகளுக்கு அண்ணனாக வருகையில் சென்டிமென்ட் தூக்கலாகத் தானே இருக்கும்.
மறுதுவக்கம்
தமிழில் கிட்டத்தட்ட காணாமல் போன தமன்னா வீரம் படம் தனக்கு மறுதுவக்கமாக இருக்கும் என்று திடமாக நம்புகிறார்.
ஸ்ருதி
ஸ்ருதிக்கும் உங்களுக்கும் இடையே லடாயாமே என்று கேட்டாலே கொதித்துவிடுகிறார். எனக்கும் ஸ்ருதிக்கும் இடையே ஒரு பிரச்சனையும் இல்லை என்று பட்டென்று பதில் அளித்துள்ளார்.
சிண்டு முடியாதீங்க
ஸ்ருதியின் வாய்ப்பை நானோ எனது வாய்ப்பை அவரோ தட்டிப் பறிக்கவில்லை. நாங்கள் எங்கள் வேலையை பார்த்துக் கொண்டிருக்கிறோம். தயவு செய்து எங்களுக்குள் சிண்டு முடிந்து விடுவதை நிறுத்துங்கள் என்றார் தமன்னா.
.