ஸ்ரீதிவ்யா மீது தயாரிப்பாளர் சங்கத்தில் புகார்
வருத்தப்படாத வாலிபர் சங்கம், ஜீவா ஆகிய படங்களை அடுத்து நடிகை ஸ்ரீதிவ்யாவுக்கு கோலிவுட்டில் வாய்ப்புகள் பெருகிக்கொண்டே போகிறது. முதல் படத்தில் சில லட்சங்களில் ஆரம்பித்த அவரது சம்பளம் தற்போது பலமடங்கு உயர்ந்துள்ளது. தற்போது அவர் சிவகார்த்திகேயனோடு காக்கி சட்டை, ஜி.வி.பிரகாஷுடன் பென்சில், விக்ரம் பிரபுவுடன் வெள்ளைக்கார துரை, மற்றும் அதர்வாவுடன் ஈட்டி ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.
தற்போது ஸ்ரீதிவ்யாவின் மார்க்கெட் உயர்ந்துள்ளதை அடுத்து ஸ்ரீதிவ்யா நடித்து முடிக்கப்படாமல் கிடப்பில் போட்ட நகர்ப்புறம், காட்டு மல்லி ஆகிய இரண்டு படங்களையும் அதன் தயாரிப்பாளர்கள் தூசி தட்டி மீண்டும் படப்பிடிப்பை தொடங்க முடிவு செய்துள்ளனர். ஆனால் ஸ்ரீதிவ்யாவிடம் கால்ஷீட் கேட்கும்போதெல்லாம் தன்னிடம் இப்போது கைவசம் காஷீட் தேதிகள் இல்லை என்று கூறி கால்ஷீட் கொடுக்க ஸ்ரீதிவ்யா மறுத்து வருகிறாராம்.
இதனால் இந்த இரண்டு தயாரிப்பாளர்களூம் தயாரிப்பாளர்கள் சங்கத்தில் புகார் கொடுக்க முடிவு செய்துள்ளனர். விரைவில் இந்த பிரச்சனைக்கு தீர்வு ஏற்படும் என தாங்கள் நம்புவதாக அவர்கள் கூறி வருகின்றனர்.