ஷங்கருக்கு நெருக்கடி கொடுக்கும் கமல்-ரஜினி
Friday, October 17, 2014
விஜய்யின் கத்தி திரைப்படம் இந்தியாவில் மட்டும் 1000 தியேட்டர்களில் வெளியாகிறது என்பதை நாம் ஏற்கனவே பார்த்தோம். எனவே ரூ.150 கோடி பட்ஜெட்டில் உருவாகியுள்ள ஷங்கரின் ‘ஐ’ திரைப்படம் இதைவிட அதிக தியேட்டர்களில் வெளியிட வேண்டும் என ‘ஐ’ படக்குழுவினர் திட்டமிட்டு வருகின்றனர். ஆனால் அவர்களுடைய எண்ணம் ஈடேறுமா? என்பதில் தற்போது சந்தேகம் எழுந்துள்ளது.
விஜய்யின் கத்தி அக்டோபர் 22ஆம் தேதி 1000 தியேட்டர்களில் வெளியாகிறது. படத்தின் ரிசல்ட் பாசிட்டிவ்வாக இருந்தால் கண்டிப்பாக 20 முதல் 25 நாட்களுக்கு 1000 தியேட்டர்களிலும் கத்தி கண்டிப்பாக ஓடும். அப்படியானால் ‘ஐ’ படத்தை நவம்பர் 15ஆம் தேதிக்கு மேல் ரிலீஸ் செய்தால்தான் அதிகளவு தியேட்டர்கள் கிடைக்கும். ஆனால் டிசம்பர் 12ஆம் தேதி ரஜினியின் லிங்கா வெளியாவதால், ‘ஐ’ படக்குழுவினர் எதிர்பார்க்கும் தியேட்டர்களின் எண்ணிக்கை கிடைக்குமா? என்பதில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் கமல்ஹாசனின் ‘விஸ்வரூபம்’ திரைப்படமும் டிசம்பரில் வெளியாகும் என்ற தகவல் வெளிவந்துள்ளதால் ஷங்கர் திரைப்படத்திற்கு மேலும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. போட்டியில்லாமல் ”ஐ’ படத்தை சோலோவாக வெளியிடலாம் என்று நினைத்த ஷங்கருக்கு கமலும் ரஜினியும் நெருக்கடி கொடுத்துள்ளனர் என்று கோலிவுட்டில் ஒரே பேச்சாக இருக்கின்றது.