விஜய் சேதுபதியின் முறிந்த நட்பு
Tuesday 04 Nov 2014
வளர்ந்து வரும் இளையதலைமுறை நடிகர்களில் முன்னணி வரிசையில் இருக்கும் விஜய் சேதுபதி நடித்த ‘வன்மம்’ திரைப்படத்தின் படப்பிடிப்புகள் முடிவடைந்து தற்போது போஸ்ட் புரடொக்ஷன் பணிகள் நடந்து வருகிறது. இந்த படம் குறித்து விஜய் சேதுபதி சமீபத்தில் பேட்டியளித்தார்.
‘மதுரை மற்றும் சென்னை தமிழ் பேசி பழக்கமான எனக்கு “வன்மம்” படத்தில் நாகர்கோவில் தமிழ் பேசி நடிப்பது பெரிய சவாலாக இருந்தது. இயக்குனர் ஜெய்கிருஷ்ணா நாகர்கோவிலை சேர்ந்தவர் என்பதால் அவர் கொடுத்த பயிற்சியின் உதவியால்தான் நடித்தேன்.
படத்தின் நானும் கிருஷ்ணாவும் நெருங்கிய நண்பர்கள். எங்களுக்கிடையே திடீரென ஏற்படும் கருத்துவேறுபாடுதான் படத்தின் மையக்கரு. நெருங்கிய நண்பர்களாக இருந்தாலும், நாம் பேசும் வார்த்தைகளில் மிகுந்த கவனம் தேவை. ஒருசில வார்த்தைகளால்தான் பல ஆண்டுகளாக தொடர்ந்து வந்த நட்பு முறிவடைகிறது என்பதை விளக்கும் கதைதான் ‘வன்மம்’ என்று கூறியுள்ளார்.
விஜய் சேதுபதி, கிருஷ்ணா, சுனைனா நடித்திருக்கும் இந்த படம் விரைவில் திரைக்கு வருகிறது.