விக்ரம் தொண்டையை பதம் பார்த்த ‘ஐ’
Monday 13.10.2014
விக்ரம், எமி ஜாக்சன் நடித்த ஷங்கரின் பிரமாண்டமான திரைப்படமான ‘ஐ’ படத்தின் டப்பிங் பணிகள் தற்போது மிகவும் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி ஆகிய மூன்று மொழிகளிலும் விக்ரம் தனது சொந்த குரலில் டப்பிங் செய்து வருகிறார்.
இந்நிலையில் ‘ஐ’ படத்தின் அகோரமான கூனி வேடத்திற்காக விக்ரம் வித்தியாசமான முறையில் குரலை மிகவும் கரகரப்பாக மாற்றி டப்பிங் செய்து வருவதாகவும், அதனால் அவரது தொண்டையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன. ஒவ்வொரு முறையும் கூனி வேடத்திற்கு டப்பிங் செய்து முடித்தவுடன் டாக்டரிடம் சென்று விக்ரம் தனது தொண்டைக்கு சிகிச்சை எடுத்து கொள்கிறாராம்.
மிகவும் அர்ப்பணிப்பு உணர்வுடன் விக்ரம் இந்த படத்திற்காக பணிபுரிவது கண்டு ‘ஐ’ படக்குழுவினர் விக்ரம் அவர்களை மிகவும் பாராட்டியுள்ளனர். இந்த படத்திற்காக விக்ரம் தனக்கு தேசிய விருது கிடைக்க வாய்ப்பு இருப்பதாக கருதுவதால் அவரே படம் முழுவதையும் தனது சொந்த குரலில் டப்பிங் செய்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில் ‘ஐ’ படத்தின் டப்பிங் மற்றும் ரீரிக்கார்டிங் பணிகள் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாகவும் கண்டிப்பாக ‘ஐ’ திரைப்படம் நவம்பர் இறுதியில் வெளியாகும் என்றும் ஆஸ்கார் ரவிச்சந்திரன் தெரிவித்துள்ளார்.