ரஜினி வீட்டில் விசேஷம்
ஏப்ரல் 11 அன்று பிரம்மாண்டமாக வெளியாகவிருக்கிறது சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் கோச்சடையான். அதற்கு சரியாக ஒரு மாதம் முன்பு, அதாவது மார்ச் 11 ரஜினியின் வாழ்வில் மிக முக்கியமான நாள். அந்த நாளில்தான் சிவாஜி கெய்க்வாடாக இருந்தவர் ரஜினிகாந்த் என்று தன் குருநாதல் இயக்குநர் கே.பாலச்சந்தரால் பெயர்சூட்டப்பட்டார்.
கடந்து வந்த பாதையையும் ஏற்றிவிட்ட கரங்களையும் என்றும் மறவாதவரான ரஜினி, தன் வெற்றிக்குக காரணமான பெயரைப் பெற்ற நாளைக் கொண்டாடாமல் இருப்பாரா? ஒவ்வொரு ஆண்டும் போயஸ் கார்டனில் உள்ள தன் வீட்டில் நெருங்கிய நண்பர்கள் மற்றும் திரைவாழ்வில் தன் முன்னேற்றத்துக்குப் பங்களித்த பெரியவர்களுக்கு விருந்து கொடுப்பார். இந்த விருந்தில் இடம்பெறும் உணவு வகைகளை ரஜினியின் மனைவி லதா ரஜினிகாந்தே சமைப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த ஆண்டும் ‘ரஜினி பெயர் பிறந்தநாள் கொண்டாட்டங்களுக்கு ஏற்பாடுகள் நடந்துவருவதாகக் தெரியவந்துள்ளது.