ரஜினி படத்தின் அடுத்த இசையமைப்பாளர் அனிருத்?
கே எஸ் ரவிக்குமார் இயக்கத்தில் ரஜினி இரு வேடங்களில் நடிக்கும் புதிய படத்துக்கு இசையமைக்கும் வாய்ப்பு அனிருத்தை நோக்கித் திரும்பியிருப்பதாகக் கூறப்படுகிறது. பொதுவாக சமீப கால ரஜினி படங்களுக்கு இசையமைக்கும் வாய்ப்பு ஏ ஆர் ரஹ்மானுக்குதான் வழங்கப்பட்டு வந்தது
ஆனால் அவர் இப்போது இந்தி மற்றும் ஹாலிவுட்டில் பிஸியாக இருப்பதாகக் கூறப்படுகிறது. ‘கோச்சடையான்’ படத்திற்குப் பிறகு ராக்லைன் வெங்கடேஷ் தயாரிப்பில் கே.எஸ்.ரவிக்குமார் இயக்கும் படத்தில் நடிக்கிறார் ரஜினி. இதில் அவருக்கு அனுஷ்கா – சோனாக்ஷி சின்ஹா என இரு ஹீரோயின்கள். இந்தப் படத்தின் இசையமைப்பாளராக முதலில் ஏ ஆர் ரஹ்மான் என்று கூறப்பட்டது. இப்போது அனிருத்துக்கு அந்த வாய்ப்பைத் தர முடிவெடுத்திருப்பதாகத் தெரிகிறது. அனிருத் வேறு யாருமல்ல, ரஜினியின் மைத்துனர் ரவி ராகவேந்தரின் மகன். நேரடி ரத்த உறவு. ஏற்கெனவே அனிருத் படங்களில் நடிக்க முடிவெடுத்த போது அவரை அழைத்துக் கண்டித்த ரஜினி, பேசாமல் இசையமைப்புப் பணியை பார்… நாளை என் படத்துக்கே கூட இசையமைக்கும் வாய்ப்பு வரும் என்று அட்வைஸ் பண்ணியிருந்தாராம். அவர் சொன்னது போலவே அனிருத்துக்கு இப்போது வாய்ப்பு கிடைத்துள்ளது. கையில் வெண்ணெயை வைத்துக் கொண்டு நெய்க்கு ஏன் அலையணும் என்ற எண்ணத்தில், இந்த வாய்ப்பை நேரடியாகவே அனிருத்துக்குக் கொடுத்திருக்கவும் வாய்ப்பிருக்கிறது!