ரஜினி, கமல், அஜீத் வரிசையில் வில்லனாகவும் களமிறங்கும் விஜய், சூர்யா.
Tuesday 10 June 2014
சென்னை: கத்தி படத்தில் இரட்டை வேடத்தில் நடிக்கவுள்ளார் நடிகர் விஜய். அதில் ஒன்று வில்லன் கதாபாத்திரம் என தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் இப்போது முன்னணி நடிகர்கள் பலர் வில்லன் வேடத்தில் நடித்து வருகின்றனர். அந்த வகையில் தற்போது விஜயும், சூர்யாவும் இணைந்துள்ளார்கள். கமல் தசாவதாரம் படத்திலும், ரஜினி எந்திரன் படத்திலும், அஜித் மங்காத்தா படத்திலும் வில்லன் வேடத்தில் நடித்தனர். மக்களிடையே அதற்கு நல்ல வரவேற்பு இருக்கத்தான் செய்தது.
அந்தவகையில், விஜயும், சூர்யாவுக்கும் தங்களது புதிய படத்தில் வில்லனாக நடிக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. லிங்குசாமி இயக்கும் அஞ்சான் படத்தில் சூர்யா இரட்டை வேடத்தில் நடிக்கிறார். அதில் ஒரு வேடம் வில்லனாம். அதேபோல் முருகதாஸ் இயக்கும் கத்தி படத்தில் விஜய் இரட்டை வேடம் என்று அனைவருக்கும் தெரியும். ஆனால் தற்போது வந்த தகவலின் படி அதில் ஒரு வேடத்தில் விஜய் வில்லன் அவதாரம் எடுத்திருக்கிறாராம். கதாநாயகனாக மட்டுமல்லாமல் வில்லனாகவும்நடித்து அசத்தியிருக்கிறாராம் விஜய். சமீபத்தில் எடுக்கப்பட்ட படத்தின் சில காட்சிகளை போட்டுப்பார்த்த படக்குழு விஜய்யின் நடிப்பை பார்த்து அசந்து விட்டதாம்.