ரஜினியின் லிங்கா 200வது படம். யாருக்கு?
2014ஆம் ஆண்டு தொடங்கியதில் இருந்து இதுவரை 189 தமிழ் திரைப்படங்கள் ரிலீஸ் ஆகியுள்ளது. இந்நிலையில் திட்டமிட்டபடி லிங்கா திரைப்படம் டிசம்பர் 12ல் ரிலீஸானால் அந்த படம் இவ்வருடம் ரிலீஸாகும் 200வது படம் என்ற பெருமையை பெற வாய்ப்பு உள்ளது.
இன்று வெளியாகிற ஐந்து படங்களுடன் சேர்த்து இவ்வருடம் மொத்தம் 189 திரைப்படங்கள் ரிலீஸ் ஆகியுள்ளது. இந்நிலையில் டிசம்பர் 12ஆம் தேதிக்கு முன்னர் இன்னும் இரண்டு வெள்ளிக்கிழமை இருக்கின்றது. அந்த இரண்டு தினங்களிலும் பத்து திரைப்படங்கள் வரை ரிலீஸாக தயார் நிலையில் உள்ளது.
இதனால் டிசம்பர் 12 ஆம் தேதி ரிலீஸ் ஆகும் ரஜினியின் லிங்கா, இவ்வருடத்தின் 200வது படம் என்ற பெருமையை அடைய இருக்கின்றது. லிங்கா திரைப்படத்தின் ரிலீஸ் தேதி ரஜினியின் பிறந்த நாள் என்பதும் இந்த படம் அவருக்கு 167வது படம் என்பதும் குறிப்பிடத்தக்கது.