காதலில் விழுந்தேன், எப்படி மனசுக்குள் வந்தாய் ஆகிய படங்களின் மூலம் டைரக்டராக அறியப்பட்ட பி.வி.பிரசாத் இப்போது ஹீரோவாகவும் நடிக்க வந்துவிட்டார். இப்படத்தை இயக்குவதும் அவரே. சகுந்தலாவின் காதல் என்று பெயரிடப்பட்டிருக்கும் இப்படத்தில் சகுந்தலா யார்? நடுவில் மறக்கடிப்பட்ட தாமிரபரணி பானுதான். பெரிய ஹிட்டுகள் இல்லையென்றால் அந்த நடிகையின் பயோடேட்டாவை வெகு சீக்கிரம் மறந்து போகிற வழக்கம் இங்கு இருக்கிறது. அப்படி நடுவில் தொலைந்து போன பானுவுக்கு இந்த படம் மீண்டும் ஒரு அங்கீகாரத்தை கொடுக்கும் என்று நம்பலாம்.
ஏனென்றால், இந்த படத்தின் வசனத்தை இலக்கிய எழுத்தாளர் அ.வெண்ணிலா வசம் ஒப்படைத்திருக்கிறார் பி.வி.பிரசாத். ஒரு பெண்ணே பெண்ணுக்காக வசனம் எழுதுகிற போது ஏற்படுகிற அழுத்தம், ஒரு ஆண் எழுதுகிற போது கிடைக்குமா? அ.வெண்ணிலாவின் வசனங்கள் ஒவ்வொன்றும் நெத்தியடியாக இருக்கு என்கிறார் பிரசாத். படமும் அப்படியிருக்க வேண்டும். அப்படியிருந்தால்தான் பிரசாத்தின் போராட்டத்திற்கும் ஒரு அர்த்தம் இருக்கும்.