மருதநாயகத்தை எப்போது வேண்டுமானாலும் எடுப்பேன்- கமல்ஹாஸன்
Tuesday 18 Nov 2014
கமலஹாசன் நடித்து ரிலீசுக்கு தயாராக விஸ்வரூபம் 2, உத்தம வில்லன் மற்றும் பாபநாசம் ஆகிய மூன்று படங்கள் உள்ளன. இதில் உத்தம வில்லன் படம் விரைவில் ரிலீசாக உள்ளது. அடுத்து திப்பு சுல்தான் வாழ்க்கை வரலாற்றைப் படமாக்கப் போவதாக கமல் அறிவித்துள்ளார். இந்த நிலையில் கமலஹாசனின் லட்சிய படமான மருதநாயகம் படப்பிடிப்பு மீண்டும் துவங்கப்படலாம் என பேச்சு அடிபடுகிறது.
மருதநாயகம்
இது குறித்து கமலஹாசன் சமீபத்தில் அளித்த பேட்டியில், “மருதநாயகம் படத்தை எடுக்க பணம் மட்டும் தேவையானதாக இல்லை.
உலகளாவிய விநியோகம்
உலகளாவிய வலுவான விநியோகமும் வேண்டும். ஆங்கிலம், பிரெஞ்ச், தமிழ், மொழிகளில் இப்படம் எடுக்கப்படுவதால் அனைத்து பகுதிகளிலும் சரியான முறையில் ரிலீஸ் செய்ய வேண்டியது முக்கியம்.
30 நிமிடக் காட்சிகள்
எனவே அதற்கான சூழ்நிலைகள் அமைந்தால் படத்தை எடுப்பேன். ஏற்கனவே இந்த படத்துக்கான 30 நிமிட காட்சிகள் முடிக்கப்பட்டு விட்டன. மீதி 2 மணி நேர காட்சிகள் எடுக்கப்பட வேண்டும். அதை எப்போது வேண்டுமானாலும் எடுப்பேன்,” என்று கூறியுள்ளார்.
ராணி எலிசபெத்
மருதநாயகம் படத்தை சில ஆண்டுகளுக்கு முன்பு அப்போதைய பிரிட்டிஷ் மகாராணி இரண்டாம் எலிசபெத், முதல்வர் கருணாநிதி, ரஜினிகாந்த் முன்னிலையில் தொடங்கினார் கமல். இந்தப் படத்துக்காக உருவாக்கப்பட்ட ட்ரைலர் காட்சியும் அதற்கு இளையராஜா அமைத்த பின்னணி இசையும் மிகவும் பேசப்பட்டன.