‘என்ன சத்தம் இந்த நேரம்’ படத்தில் ஜெயம் ராஜாதான் ஹீரோ என்கிற விஷயத்தை ஏற்கனவே எழுதியிருந்தோம். இந்த படத்தில் கதாநாயகியாக நடிப்பவர் யார் என்று சொல்லவில்லையே? சரண் இயக்கத்தில் அஜீத் நடித்த காதல் மன்னன் படத்தில் அறிமுகமான மானுதான் கதாநாயகி. சிங்கப்பூரில் செட்டில் ஆகிவிட்ட மானுவை பற்றி பலருக்கும் தெரியாத தகவல் ஒன்று. சூப்பர் ஸ்டார் ரஜினி இவரை தனது மகள்களில் ஒருவரைப் போலவே நினைத்து பழகுவாராம்.
உடல்நிலை சரியில்லாமல் சிங்கப்பூர் மருத்துவமனையில் ரஜினி இருந்தபோது, அவரை கண்ணும் கருத்துமாக கவனித்துக் கொண்டவர் மானு. தற்போது நீண்ட இடைவெளிக்குப்பிறகு இப்படத்தில் நடித்திருக்கும் மானு, ரஜினியிடம் விஷயத்தை கூறி ஆசி வாங்கிக் கொண்டாராம். மானுவின் மீதிருக்கும் பாசத்தின் காரணமாக இந்த படத்தின் பாடல் வெளியீட்டு விழாவுக்கு ரஜினி வருவார் என்றொரு செய்தியையும் இப்பவே கிளப்பிவிட ஆரம்பித்திருக்கிறார்கள் கோடம்பாக்கத்தில். தன் மீதிருக்கும் பாசத்தை வியாபாரமாக்க மானு விரும்ப மாட்டார் என்று கூறுகிறவர்களும் உண்டு. பார்க்கலாம்…