புதுமுக இயக்குனரின் திகில் படத்தில் நயன்தாரா!
Tuesday 17 June 2014
நயன்தாரா தற்போது தமிழ் படங்களில் முழுவீச்சில் நடித்து வருகிறார். உதய நிதி ஸ்டாலினுடன் ‘நண்பேன்டா’, சிம்புவுடன் ‘இது நம்ம ஆளு’, ஜெயம்ரவியுடன் ‘தனி ஒருவன்’ படங்களில் ஒரே நேரத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். அடுத்து வெங்கட்பிரபு இயக்கும் ‘பூச்சாண்டி’ படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நடிக்கிறார்.
இந்த நிலையில், தற்போது புதுமுக இயக்குனர் அஸ்வின் என்பவர் இயக்கும் திகில் படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டிருக்கிறார். ஹீரோயினை மையமாக கொண்ட சூப்பர் நேச்சுரல் திகில் கதை. படத்தின் கதையை கேட்டதும் உடன் நடிப்பவர்கள் யார், தயாரிப்பது யார் என்றெல்லாம் கேட்காமல் ஓகே சொல்லிவிட்டாராம் நயன்தாரா. அதோடு தொடர்ச்சியாக 30 நாட்கள் கால்ஷீட்டும் கொடுத்திருக்கிறாராம்.
சத்யா இசை அமைக்கிறார். நெடுஞ்சாலை படத்தில் நடித்த ஆரி முக்கிய கேரக்டரில் நடிக்கிறார். மற்ற நடிகர் நடிகைகள் டென்னீஷியன்கள் இன்னும் முடிவாகவில்லை. ஸ்டூடியோ கிரீன் ஞானவேல்ராஜா தயாரிக்கிறார்.