பிரியா ஆனந்துடன் காதல் இல்லை: அனிருத்
Wednesday 09 July 2014
நடிகை பிரியா ஆனந்தும் இசையமைப்பாளர் அனிருத்தும் காதலிப்பதாக கிசுகிசுக்கள் பரவின. இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து காதல் வளர்ப்பதாகவும் கூறப்பட்டது.
ஏற்கனவே நடிகை ஆண்ட்ரியாவுடன் அனிருத் இணைத்து பேசப்பட்டார். இருவரும் முத்தமிடுவது போன்ற படங்கள் இண்டர்நெட்டில் பரவி பரபரப்பை ஏற்படுத்தின. தற்போது பிரியா ஆனந்தை காதலிப்பதாக செய்தி வந்துள்ளது. இதனை அனிருத் மறுத்துள்ளார்.
அவர் கூறியதாவது:–
பிரியா ஆனந்தை நான் காதலிக்கவில்லை. இருவரும் நண்பர்களாகத்தான் பழகுகிறோம். ‘எதிர் நீச்சல்’ படத்துக்கு இசையமைத்தபோது அதில் நடித்த சிவகார்த்திகேயன், பிரியா ஆனந்த், சதீஷ் போன்றோருடன் நெருக்கமான நட்பு ஏற்பட்டது. ‘வணக்கம் சென்னை’ படத்திலும் இந்த நட்பு தொடர்ந்தது. இந்த இரண்டு படங்களும் முடிந்த பிறகு பிரியா ஆனந்தை நான் சந்திக்கவில்லை. நாங்கள் இருவருமே வேறு படங்களில் பிசியாகி விட்டோம்.
இவ்வாறு அனிருத் கூறினார்.