வந்தாளே மகராசி என்று சில நடிகைகளுக்குதான் பாராட்டுகள் கிடைக்கும். அதுவும் மிகப்பெரிய லெஜன்டுகளால் பாராட்டப்படும்போது ஏற்படும் சந்தோஷங்களுக்கு அளவே இருக்காது. அண்மையில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இயக்குனர் இமயம் பாரதிராஜா, லட்சுமிமேனனை மிகவும் ராசியான நடிகை என்று குறிப்பிட்டார்.
அவர் நடிக்கும் படங்கள் எல்லாமே பெரிய வெற்றி பெறுகிறது. அந்த பெண் தன் கால் வைக்கும் இடமெல்லாம் பொன்னாகிறது என்று குறிப்பிட, அங்கிருந்த லட்சுமிமேனனின் முகத்தை பார்க்க வேண்டுமே? பார்க்கதான் பப்ளியாக இருக்கிறாரே தவிர, நிஜத்தில் ப்ளஸ் ஒன் படிக்கிற பெண்ணல்லவா? தனது சம்பளத்தின் மதிப்பை கூட அறிந்து வைத்திராத சிறு பெண் என்று குறிப்பிடுகிறார்கள் கோடம்பாக்கத்தில். அதற்காக அவர் சம்பளம் குறைந்திருக்கிறதா என்றால் அதுதான் இல்லை. பாண்டியநாடு வெற்றிக்கு பிறகு தனது சம்பளத்தை அவர் நாற்பது லட்சமாக உயர்த்திவிட்டதாக கூறப்படுகிறது. அதையெல்லாம் அவரிடம் சொல்லிவிட்டா செய்கிறார்கள்? அதனால் அதுவும் தெரிந்திருக்க வாய்ப்பில்லையாம். நம்புறீங்க?