நண்பேண்டா… மீண்டும் நயன்தாராவுடன் இணையும் உதயநிதி!
Thursday, January 23, 2014
இது கதிர்வேலன் காதல் படத்தில் ஜோடி சேர்ந்த உதயநிதியும் நயன்தாராவும், மீண்டும் இணைகிறார்கள். உதயநிதியின் சொந்தப் படமான நண்பேண்டாவிலும் அவருக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். எஸ் ஆர் பிரபாகரன் இயக்கத்தில் உருவாகும் இது கதிர்வேலன் காதல் படம் ரிலீசுக்கு தயாராக உள்ளது.
இந்த நிலையில் தனது அடுத்த புதுப் படத்தை அறிவித்துள்ளார் உதயநிதி. படத்தின் பெயர் நண்பேண்டா. இதனை உதயநிதியின் ரெட்ஜெயன்ட் மூவீஸ் பெரிய பட்ஜெட்டில் தயாரிக்கிறது.
ராஜேஷ் உதவியாளர் இந்தப் படத்தை இயக்குபவர் ஏ ஜெகதீஷ். இவர் இயக்குநர் ராஜேஷிடம் சிவா மனசுல சக்தி, பாஸ் என்கிற பாஸ்கரன், ஒரு கல் ஒரு கண்ணாடி ஆகிய படங்களில் பணியாற்றியுள்ளார்.
இந்தப் படத்தின் நாயகியாக மீண்டும் நயன்தாராவையே ஒப்பந்தம் செய்துள்ளனர். இது கதிர்வேலன் காதலியில் அவர் தந்த ஒத்துழைப்புதான் படத்தை திட்டமிட்டபடி முடிக்க முடிந்தது என்பதால், மீண்டும் அவரையே ஒப்பந்தம் செய்திருக்கிறார்களாம்.
பருப்பில்லாம கூட சாம்பார் வைப்பாங்க… சந்தானம் இல்லாமல் உதயநிதி படமெடுப்பாரா என்ன…? இந்தப் படத்திலும் ஹீரோவுக்கு இணையான முக்கிய வேடத்தில் நடிக்கிறார் சந்தானம்.
உதயநிதியின் ஆஸ்தான இசையமைப்பாளராகிவிட்ட ஹாரிஸ் ஜெயராஜ்தான் இந்தப் படத்துக்கும் இசை அமைக்கிறார். பாலசுப்பிரமணியம் ஒளிப்பதிவு செய்கிறார்.