த்ரிஷாவுக்கு திருமணம் நடக்க மனசு வைப்பாரா ரஜினி?
Thursday 21.08.2014
சென்னை: த்ரிஷாவுக்கு திருமணமாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஏன் மனசு வைக்க வேண்டும் என்று தானே நினைக்கிறீர்கள்?. காரணம் இருக்கு மக்களே. த்ரிஷா நடிக்க வந்து 10 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது. கோலிவுட் தவிர டோலிவுட்டிலும் ஒரு ரவுண்ட் வந்துவிட்டார். பாலிவுட் பக்கமும் சென்றார் ஆனால் அங்கு ஒன்றும் நடக்கவில்லை. தற்போது சாண்டல்வுட்டுக்கு சென்றுள்ளார். சரி இதுக்கும் த்ரிஷாவின் திருமணத்திற்கும் என்ன சம்பந்தம் என்று கேட்கிறீர்களா? எல்லாம் அவசரம் கொஞ்சம் பொறுமையாக படியுங்கள்.
விஜய், கமல் ஜீவா, சிம்பு, ரவி உள்ளிட்ட இளம் ஹீரோக்கள், விஜய், அஜீத், விக்ரம் என்று சீனியர்கள் மற்றும் கமல் என்ற சூப்பர் சீனியர் ஆகியோருடன் ஜோடி சேர்ந்துவிட்டார் த்ரிஷா.
ரஜினி சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் ஜோடி சேர்ந்து ஒரு படத்திலாவது நடிக்க வேண்டும் என்று த்ரிஷா ஆசைப்படுகிறார்.
திருமணம் 31 வயதாகிவிட்டது மார்க்கெட்டும் டல்லடிக்கிறது எப்பொழுது திருமணம் என்று கேட்டால் இன்னும் ரஜினி சாருடன் நடிக்க வேண்டி உள்ளது. அதன் பிறகே திருமணம் என்கிறார் த்ரிஷா.
சாரே த்ரிஷா சொல்வதை பார்த்தால் ரஜினியுடன் நடிக்காமல் மணமேடை ஏற மாட்டார் போன்று. த்ரிஷாவின் ஆசையை நிறைவேற்றி அவர் விரைவில் திருமதி ஆக உதவுவாரா ரஜினி என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
லிங்கா லிங்காவில் ஒரு பாடலுக்கு ஆட த்ரிஷாவை அணுகியதாக பேச்சு கிளம்பியது. ஆனால் இந்த தகவலை த்ரிஷா மறுத்துள்ளார். ஒரு வேளை அவரை ஆட அழைத்தால் லிங்கா ரிலீஸுக்கு பிறகு செட்டில் ஆவாரா?