தென்னிந்தியாவில் நம்பர் 1 இடத்தை பிடித்த கத்தி
Monday, October 27, 2014
விஜய், சமந்தா நடித்த ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் தீபாவளி தினத்தில் வெளியான கத்தி இதுவரை தென்னிந்திய திரைப்படம் செய்யாத சாதனை வசூலை பெற்றுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளன.
தென்னிந்திய திரைப்படம் ஒன்று வெளியான முதல் நாளிலேயே ரூ.23.80 கோடி வசூல் செய்து முதல் முறையாக சாதனை செய்துள்ளது. தீபாவளி தினத்தில் மட்டும் ‘கத்தி’ திரைப்படம் தமிழகம், கேரளா, கர்நாடகா மற்றும் வெளிநாடுகள் ஆகியவற்றின் மொத்த கலெக்ஷன் தொகைதான் இந்த 23.80 கோடி. இதுவரை இந்த தொகையை எந்த தென்னிந்திய திரைப்படமும் வசூல் செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
வட இந்தியாவில் மட்டும் ‘கத்தி’ திரைப்படம் கடந்த புதன்கிழமை ரூ.16.45 கோடியும், வெளிநாட்டில் ரூ.7.35 கோடியும் வசூல் செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. கத்தி திரைப்படம் கர்நாடகா மாநிலத்தில் முதல் இரண்டு நாட்களில் 450 காட்சிகள் திரையிடப்பட்டுள்ளன. அதிலும் குறிப்பாக பெங்களூரில் 290 காட்சிகள் திரையிடப்பட்டுள்ளன. கன்னடர்கள் அதிகம் வாழும் பெங்களூரில் ஒரு தமிழ்த்திரைப்படம் சுமார் 80% காட்சிகளை ஆக்கிரமித்தது பெரிய ஆச்சரியத்தை அளித்துள்ளது.
இன்னும் என்னென்ன சாதனைகளை கத்தி படைக்க இருக்கின்றது என்பதை இந்திய திரையுலகம் ஆச்சரியப்பார்வையை கத்தியின் மீது பதித்துள்ளது.