தீபிகா படுகோனேவின் வசனத்தை கட் செய்த சென்சார் போர்டு
Wednesday 28 Wednesday 2014
பாலிவுட் இயக்குனர் ஹோமி அட்ஜானியா இயக்கி விரைவில் வெளிவர உள்ள ஃபைண்டிங் ஃபன்னி (Finding Fanny) என்ற திரைபடத்தில் தீபிகா படுகோனே கன்னித்தன்மை குறித்து பேசும் ஒரு வசனத்தை சென்சார் போர்டு நீக்கியுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இந்த திரைப்படத்தில் நாயகி தீபிகா படுகோனே, ஹீரோ அர்ஜூன் கபூருடன் பேசும் ஒரு வசனத்தில், “நான் ஒரு கன்னித்தன்மையுள்ள பெண்” என்று பேசும் வசனத்தில் கன்னித்தன்மை என்ற வார்த்தையை மியூட் செய்ய சென்சார் போர்டு அறிவுறுத்தியுள்ளது. இதனால் இயக்குனர் கடும் அதிருப்தியில் உள்ளார்.
ஏற்கனவே ஷாருக்கான் நடித்த தில்சே படத்தில் ப்ரீத்தி ஜிந்தா மற்றும், 2 ஸ்டேட்ஸ் படத்தில் அலியா பட் ஆகியோர் பேசிய வசனம்தான் இது என்றும், அந்த படத்தில் இடம்பெற்ற நிலையில் தன்னுடைய படத்தில் மட்டும் அந்த வசனத்திற்கு தடை ஏன் என்றும் இயக்குனர் தரப்பில் எடுத்துரைத்த வாதத்தை சென்சார் அதிகாரிகள் ஏற்றுக்கொள்ளவில்லை. இந்த படத்தில் விர்ஜின் என்ற வார்த்தை ஆபாசத்தை குறிப்பதாகவும், அதனால் அந்த வசனத்தை மியூட் செய்துவிட்டதாகவும் சென்சார் அதிகாரிகள் விளக்கம் கொடுத்துள்ளனர்.
மேட்டாக் பிலிம்ஸ் மற்றும் பாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோஸ் தயாரித்துள்ள இந்த திரைப்படம் வரும் செப்டம்பர் மாதம் 12ஆம் தேதி வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.