தன்னுடைய பிரமாண்ட வெண்கலச் சிலையை தானே திறந்து வைத்த அர்னால்ட்
Thursday 16 OCT 2014
கொலம்பஸ் நகரில் நடந்த அர்னால்ட் விளையாட்டுத் திருவிழாவில் தனது பிரமாண்ட வெண்கலச் சிலையைத் திறந்து வைத்தார் ஹாலிவுட் நடிகரும் கலிபோர்னியாவின் முன்னாள் ஆளுநருமான அர்னால்ட். பாடி பில்டிங் எனப்படும் உடற்கட்டமைப்பு கலையில் ஆறு முறை ‘மிஸ்டர் ஒலிம்பியா’ பட்டம் பெற்று சாதனைப் படைத்தவர் அர்னால்ட். அவரது கை சாதாரணமாக ஒருவர் தோளில் பட்டாலே, அப்படி வலிக்குமாம். இந்த வயதிலும் அத்தனை பலசாலி.
அவரைப் பெருமைப்படுத்தும் விதமாக, வட அமெரிக்காவின் ஓஹையோ மாகாணத்தில் உள்ள கொலம்பஸ் நகரத்தில் ஒரு பிரமாண்ட சிலை நிறுவப்பட்டுள்ளது. ஆண்டுதோறும் இங்கு அர்னால்ட் பெயரில் விளையாட்டுத் திருவிழா நடக்கிறது. இதில் லட்சக்கணக்கில் பார்வையாளர்கள் கலந்துகொள்கிறார்கள் என்றால் இந்த விழாவின் சிறப்பு புரிந்திருக்கும். இந்தப் போட்டி நடக்கும் மெமோரியல் ஹாலில், ஏற்கெனவே அர்னால்டுக்கு சின்னதாக ஒரு வைத்திருந்தார்கள். இப்போது 8 அடி உயரம் மற்றும் 600 பவுண்ட் எடை கொண்ட (273 கிலோ) வெண்கலச் சிலையை அமைத்துப் பெருமைப்படுத்தி இருக்கிறது விளையாட்டுத் திருவிழா குழு. சமீபத்தில் கொலம்பஸில் நடந்த சிலைத் திறப்பு விழாவில், அர்னால்ட கலந்துகொண்டு, தன்னுடைய சிலையைத் தானே திறந்துவைத்தார். 2015 மார்ச் 5 முதல் 8 வரை நடக்க இருக்கும் 24-வது அர்னால்டு விளையாட்டுத் திருவிழாவில் 2 லட்சம் பேர் வரை திருவிழாவுக்கு வருவார்கள் என எதிர்ப்பார்க்கிறார்கள்