டைரக்டர் விஜய்யுடன் திருமணமா? நடிகை அமலாபால் பேட்டி
சென்னை,
டைரக்டர் விஜய்யுடன் திருமணமா? என்ற கேள்விக்கு நடிகை அமலாபால் பதில் அளித்தார்.
காதல்
‘பொய் சொல்லப்போறோம்’, கிரீடம், மதராசப்பட்டினம், தெய்வத்திருமகள்’ ஆகிய படங்களை டைரக்டர் செய்தவர் விஜய். இவருக்கும், நடிகை அமலாபாலுக்கும் காதல் இருந்து வருவதாகவும், இருவரும் திருமணம் செய்து கொள்ளப்போவதாகவும் கிசுகிசுக்கப்பட்டது.
இதற்கிடையில், டைரக்டர் விஜய், அமலாபால் ஆகிய இருவருக்கும் வருகிற ஜூன் 12–ந்தேதி திருமணம் நடைபெற இருப்பதாக நேற்று தகவல் வெளியானது. இதுபற்றி டைரக்டர் விஜயிடம் விசாரிக்க முயன்றபோது, அவர் அமெரிக்கா சென்றிருப்பது தெரியவந்தது.
அமலாபால் அறிக்கை
இதுதொடர்பாக நேற்று இரவு நடிகை அமலாபால் ஒரு அறிக்கை வெளியிட்டார். அதில் அவர் கூறியிருப்பதாவது:–
டைரக்டர் விஜய் இப்போது அமெரிக்கா சென்றிருக்கிறார். அவர் சென்னை திரும்பியதும் என் வருங்கால வாழ்க்கையைப்பற்றிய அதிகாரப்பூர்வமான முடிவை அறிவிப்பேன்.
இவ்வாறு அந்த அறிக்கையில் அமலாபால் கூறியிருக்கிறார்.