டங்காமாரி பாடல் உருவான விதம். பாடலாசிரியர் ரோகேஷ்
December 09, 2014
கடந்த சில நாட்காளாக இளைஞர்களின் மத்தியில் பயங்கரமாக பிரபலமாகியுள்ள பாடல் அனேகன் படத்தில் இடம்பெற்றுள்ள ‘டங்காமாரி ஊதாரி’ பாடல்தான். தனுஷ், மரண கானா விஜி, நவீன் மாதவ் பாடியுள்ள இந்த பாடலை ரோகேஷ் என்பவர் எழுதியுள்ளார். ரோகேஷுக்கு இந்த பாடல்தான் முதல்பாடல் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த பாடல் உருவானது குறித்து ரோகேஷ் கூறியபோது, ‘முதன்முதலாக இந்த பாடலின் வரிகளை எழுதி நான் அனேகன் படக்குழுவினர்களிடம் காட்டியபோது தனுஷ் உள்பட படக்குழுவினர் அனைவரும் விழுந்து விழுந்து சிரித்து என்னை ஒரு மாதிரியாக பார்த்தனர். அதன்பின்னர் அவர்கள் அனைவரும் பாராட்டியபோதுதான் எனக்கு உயிரே வந்தது. இந்த பாடலில் இடம்பெறும் டங்காமாரி என்ற சொல், வடசென்னையில் வயதானவர்கள் மட்டுமே உபயோகிக்கும் சொல். என்னுடைய பாட்டி அடிக்கடி என்னை ‘டங்காமாரி ஊதாரியா சுத்திக்கிட்டே இருக்கியேடா’ என்று திட்டுவார். என் பாட்டியின் திட்டுதான் எனக்கு தற்போது வாழ்வு கொடுத்துள்ளது.
இந்த பாடலை பாடுவதற்கு பலரை அழைத்து வந்து கே.வி.ஆனந்த் முயற்சி செய்தார். ஆனால் பாடல் இயல்பாக அமையவில்லை. கடைசியில் மரண கானா விஜி குரலில் மிக அற்புதமாக ஹாரீஸ் ஜெயராஜ் இந்த பாடலை அமைத்துள்ளார். என்னை கே.வி.ஆனந்த் சார் அவர்களிடம் அறிமுகப்படுத்திய கலை இயக்குனர் கிரணுக்கு என்னுடைய நன்றி’ என்று கூறியுள்ளார்.
இந்த ஒரே பாடலின் சூப்பர் ஹிட் ரோகேஷுக்கு பல பாடல்களை எழுத வாய்ப்பு கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது.