சௌந்தர்யாவை தொடர்ந்து ரஜினியை இயக்கும் ஐஸ்வர்யா?
Monday 25 Aug 2014
சௌந்தர்யா சூப்பர்ஸ்டார் ரஜினியை வைத்து பல்வேறு முயற்சிகள் செய்து, ‘சுல்தான்’ – The Warrior என்று ஆரம்பித்து 5 வருடங்கள் கழித்து மோஷன் காப்ச்சர் முறையில் கோச்சடையான் படத்தை கே.எஸ். ரவிக்குமாரின் திரைக்கதை உதவியுடன் முடித்தார்.
ஆனால் ஐஸ்வர்யா இடைப்பட்ட காலத்தில் தனது கணவர் தனுஷை வைத்து ’3′ படத்தை இயக்கி முடித்தார். இதனிடையே கௌதம் கார்த்திக்குடனான ‘வை ராஜா வை’ படத்தின் சில காட்சிகளை ரஜினிக்கு போட்டு காண்பித்த ஐஸ்வர்யாவை ரஜினி வெகுவாக பாராட்டியது மட்டுமல்லாமல், அவரிடமிரிந்து ஒரு கதையையும் கேட்டதாக கூறப்படுகிறது.
ஷங்கரின் யந்திரன் – 2 கைவிடப்பட்ட நிலையில், ‘லிங்கா’ வை தொடர்ந்து தனது மகளின் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் நடிக்க கூடும் என்று நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதைப்பற்றிய அதிகாரப்பூர்வ தகவல்கள் இன்னும் சில தினங்களில் வெளிவரும் என்று எதிர்ப்பர்க்கபடுகிறது.