சிவகார்த்திகேயனுக்கு விட்டுக்கொடுத்த கமல்
Friday 31, Oct 2014
மான் கராத்தே வெற்றி படத்திற்கு பின்னர் ‘டாணா’ என்ற படத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வந்தார். இந்த படத்திற்கு முதலில் காக்கி சட்டை என்ற பெயர் வைக்கப்பட்டது. ஆனால் சத்யாமூவீஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் கமல்ஹாசன் நடித்த காக்கி சட்டை பெயரை பயன்படுத்த அனுமதி கிடைக்காததால், பின்னர் டாணா என மாற்றப்பட்டதாக செய்திகள் வெளிவந்தது.
இந்நிலையில் கமல்ஹாசன் மற்றும் சத்யா மூவீஸ் ஆகியோர்களின் முறையான அனுமதியின் பேரில் படத்திற்கு மீண்டும் ‘காக்கி சட்டை’ என்ற பெயர் உறுதி செய்யப்பட்டுள்ளதாக சிவகார்த்திகேயன் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார். தனக்காக காக்கி சட்டை டைட்டிலை விட்டுக்கொடுத்த கமல்ஹாசனுக்கும், சத்யா மூவீஸ் நிறுவனர் ஆர்.எம்.வீரப்பன் அவர்களுக்கு தனது நன்றியை அவர் சமூக வலைத்தளத்தின் மூலம் தெரிவித்துக்கொண்டுள்ளார்.
காக்கி சட்டை படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ஸ்ரீதிவ்யா நடிக்கிறார். எதிர்நீச்சல் படத்தை இயக்கிய துரை செந்தில்குமார் இயக்கி வருகிறார். தனுஷ் தயாரிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். மேலும் இந்த படத்தின் கதை மற்றும் திரைக்கதையை பிரபல எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர் எழுதியுள்ளார்.