சிம்புவிடமிருந்து முழுசா விலகிட்டேங்க- ஹன்சிகா
Friday 04 Apr 2014
சிம்புவிடமிருந்து முற்றிலுமாக விலகிவிட்டேன். அவரைப் பற்றி என்னிடம் எதுவும் கேட்க வேண்டாம் என நடிகை ஹன்சிகா கூறியுள்ளார். சிம்புவும் ஹன்சிகாவும் வேட்டை மன்னன், வாலு இரண்டு படங்களில் சேர்ந்து நடித்தனர். திடுமென்று காதலில் விழுந்துவிட்டதாக அறிவித்தனர். இந்த காதலை இருவருமே பகிரங்கமாக அறிவிக்கவும் செய்தனர். ஆனால் இது நீடிக்கவில்லை.
குறுக்கே வந்த நயன்?
அப்போதுதான் முன்னாள் காதலர்களான சிம்புவும் நயன்தாராவும் இது நம்ம ஆளு படத்துக்காக சேர்ந்து நடிப்பதாக அறிவிப்பு வர, அப்போது விழுந்தது இருவரின் காதலிலும் பெரிய விரிசல்.
ஹன்சிகா அம்மா
மேலும் ஹன்சிகாவை சிம்புவுடன் அதிக நேரம் இருக்கவிடாமல் செய்ய முயன்ற அவர் அம்மா, அதில் வெற்றியும் பெற்றார். ஒரு தெலுங்கு நடிகரோடு ஹன்சிகாவைக் கோர்த்துவிட்டார். இருவரும் சேர்ந்து ஒரு படம் நடிக்க, சிம்புவுக்கு கடுப்பு ஏற்பட்டதாகச் சொல்கிறார்கள்.
சிங்கிள்
அந்த நேரம் பார்த்து காதலர் தினம் வர, ஹன்சிகா நான் சிங்கிள் என ஸ்டேடஸ் போட்டு பிரிவை உறுதியாக்கினார்.
சிம்பு அறிக்கை
அடுத்த சில தினங்களிலேயே, இனி எனக்கும் ஹன்சிகாவுக்கும் ஒட்டும் இல்லை, உறவுமில்லை என பகிரங்க அறிக்கை விட்டார் சிம்பு. காதலும் முறிந்ததது.
காதல் முறிவை சிம்பு அதிகாரபூர்வமாக அறிவித்தாலும், ஹன்சிகா எதுவும் பேசாமல் இருந்தார். ஹைதராபாத்தில் அவரிடம் சிம்புவுடனான காதல் முறிவு குறித்து நிருபர்கள் கேட்டனர். இதற்கு பதில் அளித்த அவர், “சிம்புவை விட்டு நான் விலகி விட்டேன். அவரைப் பற்றி என்னிடம் இனிமேல் எதுவும் கேட்க வேண்டாம். நான் பேசவும் மாட்டேன். இப்போது என் கவனமெல்லாம் நடிப்பில் மட்டுமே இருக்கிறது,” என்றார்.