சமுத்திரக்கனியின் சங்கடம்
சமீபகாலமாக பெரிய பட்ஜெட் படங்களின் வெளியீடு சிசேரியன் பிரசவமாகதான் இருக்கிறது. அண்மையில் இந்த வலியில் சிக்கிய படம் ‘நிமிர்ந்து நில்’. கடைசி நேரத்தில் இந்த படத்திற்கு நேர்ந்த சிக்கல் என் எதிரிக்குக் கூட வரக்கூடாது என்று கூறுகிறார் சமுத்திரக்கனி.
அன்றைய தினம் எல்லாவற்றையும் மவுனமாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தேன் என்கிறார் கவலையாக. இந்த படத்திற்காக ஒரு பெரும் தொகையை ஜெயம் ரவி விட்டுக் கொடுத்தார் என்றும், சமுத்திரக்கனியும், அமலாபாலும் கூட தங்கள் பங்களிப்பை செய்தார்கள் என்றும் கேள்விப்பட்ட நிருபர்கள், அது குறித்து சமுத்திரக்கனியிடமே கேள்வி எழுப்பினார்கள். நீங்கள் விட்டுக் கொடுத்த தொகை எவ்வளவுன்னு சொல்ல முடியுமா? இதுதான் நிருபர்களின் கேள்வி. ஆனால் இந்த கேள்வியை எதிர்பார்க்காத சமுத்திரக்கனி, அது வேணாம்… விட்ருங்களேன் என்றார் தர்மசங்கடமாக. நிமிர்ந்து நில் படம் எனக்கு நிறைய புதுபுது நட்புகளை கொடுத்திருக்கு. நான் நினைச்சு பார்க்காத பிரபலங்கள் கூட எனக்கு போன் பண்ணி வாழ்த்தினாங்க என்றார். அவர் சொன்ன பிரபலங்கள்… சகாயம் ஐஏஎஸ். வால்ட்டர் தேவாரம்.