சமந்தாவுக்கு காதலிக்க நேரமில்லை
Friday, 31 Jan 2014
தெலுங்கு சினிமா களத்தில், அனுஷ்கா, தமன்னா, அமலா பால், அஞ்சலி என, பல முன்னணி நடிகைகள் உள்ளபோதும், கடந்த ஆண்டு மட்டும், சமந்தாவின் நடிப்பில், அரை டஜன் படங்கள் வெளியாகியுள்ளன. அத்தனை படங்களுமே ஹிட். இதனால், ஆந்திராவில் நாளுக்கு நாள், சமந்தாவின் மவுசு எகிறிக் கொண்டே செல்கிறது. இந்த ஆண்டும், சமந்தாவின் கால்ஷீட் டைரி நிரம்பி வழிகிறது. இது போதாதென, தமிழ் சினிமாவிலும், அவ்வப்போது நடித்து, இங்குள்ள நடிகைகளுக்கு பீதியை கிளப்புகிறார். சமந்தாவை சந்திப்பவர்கள், சித்தார்த்துடனான காதலைப்பற்றி கேள்வி எழுப்பினால், கடந்த ஆண்டு ஓய்வில்லாமல் நடித்தேன். ஆனால், இந்த ஆண்டு நிம்மதியாக தூங்க கூட, நேரம் இல்லாத அளவுக்கு தமிழ், தெலுங்கு என, இரண்டு மொழியிலும் செம பிஸி. இதில், எனக்கு காதலிக்க எங்கிருந்து நேரம் கிடைக்கப்போகிறது? என, உருக்கமாக சொல்கிறாராம் சமந்தா.