சமந்தாவின் துணிச்சல்
பிஸியான நடிகையாக இருக்கும்போது அரசியல் பற்றி பேசினால், ‘ஐயே’ என்கிற நடிகைகள் அத்தனை பேரும் ரிட்டையர்டு காலம் நெருங்க நெருங்க இந்தியாவையே தோளில் ஏற்றிக் கொள்ள ஆசைப்படுவார்கள். ஆனால் சமந்தா அப்படியல்ல. மார்க்கெட்டில் நம்பர் ஒன் நிலையில் இருக்கிற இந்த நேரத்திலும் அரசியல் கருத்துகளை அசால்ட்டாக பதிவிடுகிறார் தனது ட்விட்டர் அக்கவுன்ட்டில்.
அண்மையில் டெல்லியில் மண்ணை கவ்விய காங்கிரஸ் பற்றியெல்லாம் காமென்ட் அடித்திருக்கும் அவர், ‘ஒரு இனிய தொடக்கம்’ என்று தேர்தல் முடிவுகளை வர்ணித்திருப்பதை ஆச்சர்யம் என்பதா, துணிச்சல் என்பதா? சமந்தா சொன்ன இந்த கருத்துக்கு தனது கருத்தையும் பதிவிட்டிருக்கிறார் சித்தார்த். இருவரும் ஒரே மாதிரி சிந்தித்திருக்கிறார்கள் என்பதில் ஆச்சர்யம் ஒன்றுமில்லை. மல்லிகா ஷெராவத் போன்றவர்கள் வெளிப்படையாகவே நரேந்திரமோடியை ஆதரிக்கும் நிலையில், சமந்தாவும் ஆம் ஆத்மிக்கு ஆதரவாக தேர்தல் நேரத்தில் கோஷம் போட்டால் கூட ஆச்சர்யமில்லைதான். எப்படியோ… அவர்களும் இந்நாட்டு ராணிகள்தானே? கருத்து சுதந்திரத்தை வரவேற்போம்.