கோச்சடையான் சாதனையை 12 மணி நேரத்தில் முறியடித்த ‘ஐ’
Tuesday 16 Sep 2014
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் இளைய மகள் செளந்தர்யா ரஜினிகாந்த் இயக்கிய ‘கோச்சடையான்’ திரைப்படத்தின் டீஸர் வெளியான 36 மணி நேரத்தில் யூடியூபில் ஒரு மில்லியன் பார்வையாளர்களை சென்று சாதனை படைத்தது. இதற்கு முன்னர் எந்த ஒரு இந்திய திரைப்படத்தின் டீஸரும் பெற்றிராத சாதனை இது என ரஜினியின் கோச்சடையான் திரைப்படம் பெருமை பெற்றது. ஆனால் அந்த சாதனை மிகக்குறைந்த கால இடைவெளியில் தற்போது முறியடிக்கப்பட்டுள்ளது.
பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் விக்ரம், எமி ஜாக்சன் நடிப்பில் விரைவில் வெளியாக இருக்கும் ‘ஐ’ படத்தின் டீஸர் நேற்று வெளியானது. இந்த டீஸரை உலகம் முழுவதிலும் உள்ள திரையுலக ரசிகர்கள் மிகவும் ஆர்வத்துடன் யூடியூபில் பார்த்து பிரமித்தனர். ‘ஐ’ படத்தின் டீசர், வெளியான 12 மணி நேரத்தில் ஒரு மில்லியன் பார்வையாளர்களை பெற்று, கோச்சடையான் சாதனையை முறியடித்தது.
மேலும் இந்த சாதனைக்கு வாழ்த்து தெரிவித்துள்ள ரஜினி ரசிகர்கள், ஐ’ சாதனையை விரைவில் முறியடிக்க லிங்கா வருகிறார் என கமெண்ட் எழுதியுள்ளனர்.