கே.பாலசந்தர் மீண்டும் நடிப்பு
Tuesday, January 21, 2014
உத்தம வில்லன் படத்தில் கமல்ஹாசன்தான் ஹீரோ என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம். படத்தை ரமேஷ் அரவிந்த் இயக்குகிறார். இந்த படத்தின் மூலம் நிறைய புதுமுகங்களை தமிழுக்கு அறிமுகம் செய்யப் போகிறார் கமல். அவர்கள் தமிழுலகமே அறிந்த பிரபலங்கள்தான் என்றாலும் நடிப்புக்கு புதுசு.
லிங்குசாமி இப்படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார் என்பது முன்பே கசிந்த விஷயம்தான். இந்த படத்தில் நடிப்பதற்கான முன்னோட்டமோ என்னவோ? தற்போது அவர் இயக்கிக் கொண்டிருக்கும் அஞ்சான் படத்திலும் ஒரு சில காட்சிகளில் நடித்திருக்கிறார் லிங்குசாமி. அதற்கப்புறம்தான் உத்தம வில்லனில் முழு திறமையும் காட்டுவார். உத்தம வில்லனில் நடிக்கும் இன்னொரு பிரபலம் இயக்குனர் சிகரம் பாலசந்தர்தானாம். இதற்காக அவரை தாடி மீசையெல்லாம் வைக்க சொல்லிவிட்டாராம் கமல். ஒரு காலத்தில் தனது மாணவராக இருந்தாலும் இப்போது கமலின் வேண்டுகோளை ஒரு மாணவரை போல ஏற்றுக் கொண்டு உற்சாகமாக நடிக்க தயாராகிக் கொண்டிருக்கிறார் பாலசந்தர். இதுபோக படத்தில் இன்னும் வியக்க வைக்கும் நிறைய அம்சங்களை கமல் போக போக சேர்ப்பார் என்று பேசிக் கொள்கிறார்கள். யார் யாருக்கு அதிர்ஷ்டம் இருக்கோ?