கிண்டல் செய்த ரசிகர்கள்: கோபத்தில் மாஸ் படப்பிடிப்பில் இருந்து கிளம்பிய சூர்யா
Tuesday August 19, 2014
சென்னை: சென்னையில் மாஸ் படத்தின் ஷூட்டிங் நடந்தபோது ரசிகர்களின் கிண்டல் தாங்க முடியாமல் நடிகர் சூர்யா அங்கிருந்து கிளம்பிச் சென்றுள்ளார். சூர்யா, சமந்தா நடிப்பில் லிங்குசாமி இயக்கத்தில் கடந்த 15ம் தேதி அஞ்சான் படம் ரிலீஸானது. படம் ரிலீஸாவதற்கு முன்பே அது குறித்து கொடுக்கப்பட்ட பில்ட் அப்பால் ரசிகர்கள் அதிகம் எதிர்பார்த்தனர். அதிக எதிர்பார்ப்பு இருந்ததால் படம் ரசிகர்களுக்கு திருப்தி அளிப்பதாக இல்லாமல் போனது.
அஞ்சான் படம் சரி இல்லை என்று இணையதளங்களில் ரசிகர்கள் கருத்து தெரிவித்தது படக்குழுவை கவலை அடையச் செய்தது.
அஞ்சான் படத்தை பார்க்காமலேயே அதை பற்றி தவறாக விமர்சித்தால் எப்படி என்று கூறி சூர்யாவும் வருத்தப்பட்டார்.
மாஸ் வெங்கட்பிரபு இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் மாஸ் படத்தின் படப்பிடிப்பு நேற்று முன்தினம் கீழ்ப்பாக்கத்தில் உள்ள ஈகா தியேட்டர் அருகே நடைபெற்றது.
சூர்யா மாஸ் படப்பிடிப்பை பார்க்க அங்கு கூடிய ரசிகர்கள் அஞ்சான் படம் குறித்து சூர்யாவை கிண்டல் அடித்துக் கொண்டே இருந்துள்ளனர். இதனால் சூர்யா கோபம் அடைந்துள்ளார்.
போலீசார் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அவர்கள் வந்து கிண்டல் செய்த ரசிகர்களை அங்கிருந்து கிளம்பிப் போகச் செய்தனர்கோபம் ரசிகர்களின் கிண்டலால் கோபம் அடைந்த சூர்யா படபப்பிடிப்பில் இருந்து கிளம்பிச் சென்றுவிட்டாராம். கேட்டதற்கு அஞ்சான் விளம்பர நிகழ்ச்சிக்கு செல்கிறேன் என்று தெரிவித்தாராம்.