கமலுடன் நடிக்க காஜலுக்கு ரூ.2 கோடி சம்பளம்?
Tuesday 31.12.2013
கமலுடன் நடிக்க காஜல் அகர்வாலுக்கு ரூ. 2 கோடி சம்பளம் பேசப்பட்டுள்ளது. துப்பாக்கி படத்தில் விஜய் ஜோடியாக நடித்த காஜல் அகர்வால் தற்போது ஜில்லா படத்தில் மீண்டும் அவருடன் ஜோடி சேர்ந்திருக்கிறார். டோலிவுட் படங்களில் சீனியர் நடிகர்களுடன் நடிக்க வாய்ப்பு வந்தபோது அதை ஏற்க மறுத்ததால் ஒட்டுமொத்தமாக ஹீரோக்கள் காஜலை புறக்கணித்தனர். தமிழில் இயக்குனர் லிங்குசாமி தயாரிக்கும் புதிய படத்தில் கமல் நடிக்கிறார். இதில் நடிக்க காஜலிடம் கால்ஷீட் கேட்டபோது மறுத்துவிட்டார். அவர் கேட்ட சம்பளம் லிங்குசாமிக்கு அதிர்ச்சி அளித்தது. இதையடுத்து வேறு ஹீரோயினை தேடத் தொடங்கினார்.
அனுஷ்காவை ஒப்பந்தம் செய்ய பேசியபோது ஏற்கனவே அவர் ‘ராணி ருத்ரம்மா தேவி, பாஹுபாலி ஆகிய 2 சரித்திர கால பின்னணி கதையில் நடித்து வருவதால் கால்ஷீட் இல்லை என்று கைவிரித்துவிட்டார். இதையடுத்து மீண்டும் காஜலை லிங்குசாமி தரப்பு அணுகியது. படத்தில் நடிக்க அவர் ரூ.2 கோடி சம்பளம் கேட்டதாக கூறப்படுகிறது. போக்குவரத்து செலவு, உடன் வருபவரின் செலவை தனியாக தர வேண்டும் என்றும் நிபந்தனை விதித்தாராம். அதற்கு லிங்குசாமி ஓ.கே. சொல்லிவிட்டதாக பட குழுவினர் தெரிவிக்கின்றனர்.
இதையடுத்து காஜல் ஹீரோயினாக நடிக்க முடிவு செய்யப்பட்டது. ஏற்கனவே தமிழில் நண்பன் படத்தில் நடித்த இலியானாவுக்கு ஒன்றரை கோடி சம்பளம் தரப்பட்டது. அந்த சம்பளத்தை தற்போது காஜல் மிஞ்சி இருக்கிறார்.