உதயநிதியை இயக்கும் மான் கராத்தே இயக்குநர் திருக்குமரன்
Friday 04.07.2014
முதல் படத்தை இயக்கிய புதுமுக இயக்குநருக்கு அடுத்தப்பட வாய்ப்பு கிடைப்பதை வைத்தே, அவரது முதல் படம் வெற்றிப்படமா தோல்விப்படமா என்று சொல்ல முடியும். சிவகார்த்திகேயன், ஹன்சிகா மோத்வானி நடித்த மான் கராத்தே படம் வெளியானபோது படம் எதிர்பார்த்தபடி இல்லை என்ற விமர்சனத்தை சந்தித்தது. அது மட்டுமல்ல, படத்தை வாங்கிய விநியோகஸ்தர்களுக்கு நஷ்டம் என்றும் சொல்லப்பட்டது. இதற்கிடையில் மான்கராத்தே சில தியேட்டர்களில் 100 ஆவது நாளைக் கடந்து ஓடிக்கொண்டிருக்கிறது. சரி..மான் கராத்தே வெற்றிப்படமா? தோல்விப்படமா? அதற்கான விடை தற்போது தெரிந்துவிட்டது.

யெஸ்..மான் கராத்தே படத்தின் இயக்குநர் திருக்குமரனுக்கு அடுத்தப்பட வாய்ப்பு கிடைத்திருக்கிறது. அதுவும்..பெரிய பேனரில் இரண்டாவது படத்தை இயக்கும் வாய்ப்பைப் பெற்றிருக்கிறார் திருக்குமரன். ரெட் ஜெயன்ட் மூவீஸ் உதயநிதி ஸ்டாலின் அவரை ஒப்பந்தம் செய்துள்ளார். தற்போது நண்பேன்டா படத்தில் நடித்து வரும் உதயநிதி அடுத்து அஹ்மது இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க இருக்கிறார். இந்தப்படங்களைத் தொடர்ந்து உதயநிதி நடிக்கும் படத்தையே திருக்குமரன் இயக்க உள்ளார். திருக்குமரனை ஒப்பந்தம் செய்துள்ள உதயநிதி பெரிய சம்பளம் தர ஒப்புக்கொண்டிருக்கிறாராம்.