இளையராஜாவின் பெஸ்ட் ஆல்பம். பால்கி பாராட்டு
Thursday 06 Nov 2014
அமிதாப்பச்சன், தனுஷ், அக்ஷாராஹாசன் நடிப்பில் பால்கி இயக்கி வரும் ‘ஷமிதாப்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடையும் நிலையில் உள்ளது,. இந்த படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே பால்கியின் ‘பா’ திரைப்படத்திற்கு இளையராஜாதான் இசையமைத்திருந்தார்.
இயக்குனர் பால்கி சமீபத்தில் அளித்த ஒரு பேட்டி ஒன்றில், தன்னுடன் மூன்றாவது முறையாக பணிபுரியும் இளையராஜா இந்த படத்தின் மூலம் இசையில் பல அற்புதங்களை செய்துள்ளார் என்று கூறியுள்ளார். மேலும் இந்த படத்தின் பாடல்கள் இதுவரை இளையராஜா இசையமைத்த பாடல்களிலேயே மிகவும் சிறந்த பாடல்கள் என்பதை தன்னால் உறுதியாக கூறமுடியும் என்று கூறியுள்ளார்.
குறிப்பாக இளையராஜா இசையில் ஸ்ருதிஹாசன் தனது தங்கைக்காக பாடிய பாடல் இந்த வருடத்தின் மிகச்சிறந்த பாடல்களின் பட்டியலில் இடம் பிடிக்கும் என்று கூறியுள்ளார். கஜல் பாடலாக அமைந்திருக்கும் இந்த பாடலை பாட பொறுத்தமானவர் ஸ்ருதிஹாசன் என்பதை இளையராஜா தன்னிடம் கூறியதையும் அவர் நினைவுபடுத்தினார். ஷமிதாப் வரும் 2015ஆம் ஆண்டு பிப்ரவரி 6ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது. இது தனுஷின் இரண்டாவது இந்திப்படம் என்பது குறிப்பிடத்தக்கது ஏற்கனவே ராஜண்ணா என்ற தனுஷ் நடித்த முதல் திரைப்படம் ரூ.100 கோடி கிளப்பில் சேர்ந்தது என்பதை அனைவரும் அறிவோம்.