இனி ‘தல 55′ அல்ல… என்னை அறிந்தால்.. இதுதான் அஜீத்தின் புதுப்படத் தலைப்பு!
Thursday 30 Oct 2014
பொதுவாக ஒரு படத்தின் ஷூட்டிங்குக்கு கிளம்பும் முன் அந்தப் படத்தின் தலைப்பை அறிவித்து விடுவது சினிமா வழக்கம். ரஜினி, கமல் என தமிழ் சினிமாவின் சிகரங்கள் தொடங்கி, புதிதாய் வருபவர்களும் அப்படித்தான் செய்து வருகிறார்கள் இதுவரை. ஆனால் அந்த வழக்கத்துக்கு மாறாக ஒரு தலைப்புக்கே ஓவர் பில்ட் அப் கொடுக்கிறாரோ என வெளியிலிருப்பவர்களைப் பேச வைத்தவர் அஜீத்தான்.
அவரது சமீபத்திய படங்கள் அனைத்தின் தலைப்பும் ரொம்பவே பிகு பண்ணிக் கொண்டுதான் வெளியிடுகிறார்கள். ஆரம்பம் படத்தின் தலைப்பைச் சொல்வதற்கு ஜவ்வாய் இழுத்தார்கள். ஆடியோ ரிலீசுக்கு முன்புதான் அந்தப் பெயரைச் சொன்னார்கள். இத்தனைக்கும் அதை முடிவு செய்து ஆறு மாதங்கள் அமைதி காத்தார்கள். எல்லாம் பப்ளிகுட்டி ஸ்டன்ட்தான். இப்போது கவுதம் மேனன் இயக்கும் புதுப் படத்துக்கு கடந்த எட்டு மாதங்களுக்கும் மேல் தலைப்பைச் சொல்லாமல் அமைதி காத்தார்கள். அதுவே ஏகப்பட்ட செய்திகள் உருவாகக் காரணமாக அமைந்தது. எவ்வளவு விளம்பரம் பாருங்கள். இப்போது படத்தின் இசை வெளியாக உள்ள தறுவாயில் படத்தின் தலைப்பை அறிவித்துள்ளனர். இதுவரை தல 55 என அழைக்கப்பட்டு வந்த அந்தப் படத்துக்கு ‘என்னை அறிந்தால்’ எனத் தலைப்பிட்டுள்ளனர். என்னை அறிந்தால்…. என்ன, தலைப்பு நல்லாருக்கா?