ஆரண்ய காண்டம் இயக்குநரிடம் உதவியாளரானார் கீர்த்தனா பார்த்திபன்!
Monday 09 June 2014
பார்த்திபனின் மகள் கீர்த்தனா பார்த்திபன் சிறுமியாக இருந்தபோது, மணிரத்னம் இயக்கிய கன்னத்தில் முத்தமிட்டால் படத்தில் நடித்தவர். அதன் பிறகு பல படங்களில் நடிக்க அழைப்பு வந்தும் நடிப்பதில் விருப்பமில்லை என்று சொல்லிவிட்டார் கீர்த்தனா. அதன் பிறகு விஸ்காம் படித்த கீர்த்தனா சில குறும்படங்களை இயக்கினார். தற்போது தன் அப்பா பார்த்திபன் இயக்கி வரும் கதை திரைக்கதை வசனம் இயக்கம் படத்தின் தயாரிப்பில் தன் அப்பாவுக்கு உதவியாக இருக்கிறார்.

இதற்கிடையில், ஆரண்ய காண்டம் படத்தை இயக்கிய தியாகராஜா குமாரராஜாவிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றி வருகிறாராம். ஆரண்ய காண்டம் படத்தைப் பார்த்துவிட்டு மிகவும் இம்ப்ரஸ் ஆன கீர்த்தனா, தன் அப்பாவிடம் சொல்லி தியாகராஜா குமாரராஜாவிடம் உதவி இயக்குநராக சேர்ந்திருக்கிறார். ஆரண்ய காண்டம் படம் மிகப்பெரிய அளவில் பேசப்பட்டும் கூட அப்படத்தின் இயக்குநரான தியாகராஜா குமாரராஜாவுக்கு அடுத்தப்பட வாய்ப்பு கிடைக்கவில்லை.
நீண்ட இடைவெளிக்குப் பிறகு தற்போது ஒரு படத்தை இயக்க இருக்கிறாராம்.