அப்பா பிரபு செம ஜாலி; மகன் விக்ரமோ, ரொம்ப “ஷை”… “மார்க்” போடும் மோனல் கஜ்ஜார்!
Thursday 25 Sep 2014
சென்னை: ஒரே நாளில் விக்ரம் பிரபுவுடன் சிகரம் தொடு, கிருஷ்ணாவுடன் வானவராயன் வல்லவராயன் என இரண்டு ரிலீஸ்களைக் கொடுத்து ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட் தந்த நாயகி மோனல் கஜ்ஜார். குஜராத் பெண்ணான மோனல், தெலுங்குப் படமான சுடிகாடு மூலம் திரையுலகில் நுழைந்தார். தெலுங்கில் இதுவரை மோனல் நான்கு படங்களில் நடித்துள்ளார். தமிழில் வானவராயன் வல்லவராயன், சிகரம் தொடு உள்ளிட்ட படங்களில் நடித்துக் கொண்டிருந்த போதே டிராகுலா படத்தின் மூலம் மலையாள சினிமாவிலும் அறிமுகமாகி விட்டார் மோனல். இந்நிலையில், டைம்பாஸ் வார இதழுக்கு மோனல் கஜ்ஜார் பேட்டியளித்துள்ளார். அதில், அவர் கூறியிருப்பதாவது.
மலையாளப்படம்…
சிகரம் தொடு படத்துல நடிக்கிறதுக்கு முன்னாடியே அவரோட அப்பா பிரபு சாரோட மலையாளப் படத்துல நடிச்சிட்டேன்.
ஜாலி டைப்…
பிரபு சார் செம ஜாலி டைப். அவர் இருக்கற இடமே கலகலப்பா சுவாரஸ்யமா இருக்கும். ஆனா விக்ரம் பிரபு இதுக்கு நேர்மாறான ஷை டைப். பேசவே மாட்டார்.
அதான் பிரபு…
சிகரம் தொடு பிரிமியர் ஷோ அன்னிக்கு பிரபு சார்கிட்ட உங்க பிள்ளை இவ்ளோ ஷை டைப்பா இருக்காரேனு கேட்டேன். அவர் அதுக்கு ஜாலியா, ‘அதனால தான் நான் பிரபு, அவர் விக்ரம் பிரபு’ங்கறார்’ எனத் தெரிவித்துள்ளார்.
நான் சண்டைக்காரி….
மேலும், காதல் தொடர்பான கேள்வியொன்றிற்கு, ‘நான் பொதுவா பசங்களோட சண்டை போட்டுட்டே இருப்பேன். அப்புறம் எப்படி என்கிட்ட ஐ லவ் யூ சொல்வாங்க.
நோ லவ்…
அதுவும் இல்லாம அப்போ படிப்பு, கேரியர்னு சீரியஸ்னஸ்… வீட்ல தெரிஞ்சா வீடு கட்டி அடிப்பாங்க என்ற பயம். சோ நோ லவ்’ எனப் பதிலளித்துள்ளார். ச்சமத்து!