அஜித்தும், அனோஷ்காவும் கணக்கு பார்ப்பதே இல்லை. ஷாலினி
Tuesday 25 Nov 2014
அஜீத் நடித்த ‘என்னை அறிந்தால்’ திரைப்படம் வரும் பொங்கல் திருநாளில் ரிலீஸாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் சமீபத்தில் அஜீத் மனைவி ஷாலினி அஜீத் பிரபல பத்திரிகை ஒன்றுக்கு பேட்டி அளித்தார். அந்த பேட்டியில் தங்கள் மகள் அனோஷ்கா குறித்து அவர் பல விஷயங்களை மனம் திறந்து கூறியுள்ளார்.
அஜீத்துக்கு வீட்டுக்கு வரும் விருந்தாளிகளை இன்முகத்துடன் வரவேற்கும் குணம் இயற்கையிலேயே உண்டு என்றும், அதே குணம் எங்கள் மகளுக்கும் இருக்கவேண்டும் என்பதில் அவர் மிகவும் கவனமாக இருந்தார். வீட்டுக்கு யார் வந்தாலும், அனோஷ்கா ‘வாங்க அங்கிள், வாங்க ஆன்ட்டி’ன்னு கூப்பிட்டு நலம் விசாரிப்பா. பிறரை மதிக்கும் பழக்கத்தை முதலில் குழந்தைகளிடத்தில் இருக்க வேண்டும் என்பதில் நாங்கள் இருவரும் மிகவும் உறுதியாக இருந்தோம்.
மேலும் அனோஷ்காவுக்கு சின்ன வயதில் இருந்தே ஆரோக்கியமான உணவுப்பழக்கத்தை கற்றுத்தந்துள்ளோம். மேலும் மத்தவங்களுக்கு உதவுவதில் அஜீத் கணக்கு பார்த்ததே இல்லை. இந்த அபூர்வ குணம் அப்படியே அனோஷ்காவிடம் இயற்கையாகவே உள்ளதை எண்ணி தான் மிகவும் பெருமைப்படுவதாக ஷாலினி அஜீத் கூறியுள்ளார்.